Friday, July 19, 2019

அகரமுதலி

அசோதை வருடிடும் சுருள்கரும் குழல்களும்
ஆய்ச்சியர் கொஞ்சிடும் அதிசுந்தர வதனமும்
இன்னிசை ஊற்றெடுக்கும் செவ்வாய் அதரமும் 
ஈர்த்தே ஆட்கொள்ளும் குவளையன்ன விழிகளும்
உம்பர்கோன் வியக்கக் குன்றேந்தும் சிறுவிரலும்
ஊழியில் ஆலிலை மேலெழுந்த திருவடிவும்
எதிர்வரு தடைநீக்க விறைந்திடும் கரங்களும்
ஏங்குவோர் குறைநீக்கும் ஏற்றமிகு செவிகளும்
ஐயமின்றி சரணடைவோர்க் கருளும் தாளிணையும்
ஒப்பிலா அழகனைத்தும் தெவிட்டாத தெள்ளமுதாம்
ஓய்வறியா மாமணியே வரும்பிணி தகர்த்திடும் 
ஔடதம்  உமதடிகள் அவையென்றும் எமதிலக்காம் !


10 comments:

  1. Very very happy.
    Slowly enter all the கவிதைகள்.
    சிறு துளி பெரு வெள்ளம்

    ReplyDelete
  2. Great. As usual good standard Tamil. I am trying to come up to that standard. Really enjoyable. Nice. Carry on

    ReplyDelete
  3. சரளமான,
    ஆற்றொழுக்கான
    தமிழ் நடை!
    தொடரட்டும்
    தங்கள் பணி!

    ReplyDelete
  4. அருமை. தமிழ் மீது உள்ள ஆர்வம் மேலும் கூடுகிறது

    சுபா முகுந்தன்

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...