அசோதை வருடிடும் சுருள்கரும் குழல்களும்
ஆய்ச்சியர் கொஞ்சிடும் அதிசுந்தர வதனமும்
இன்னிசை ஊற்றெடுக்கும் செவ்வாய் அதரமும்
ஈர்த்தே ஆட்கொள்ளும் குவளையன்ன விழிகளும்
உம்பர்கோன் வியக்கக் குன்றேந்தும் சிறுவிரலும்
ஊழியில் ஆலிலை மேலெழுந்த திருவடிவும்
எதிர்வரு தடைநீக்க விறைந்திடும் கரங்களும்
ஏங்குவோர் குறைநீக்கும் ஏற்றமிகு செவிகளும்
ஐயமின்றி சரணடைவோர்க் கருளும் தாளிணையும்
ஒப்பிலா அழகனைத்தும் தெவிட்டாத தெள்ளமுதாம்
ஓய்வறியா மாமணியே வரும்பிணி தகர்த்திடும்
ஔடதம் உமதடிகள் அவையென்றும் எமதிலக்காம் !
Very very happy.
ReplyDeleteSlowly enter all the கவிதைகள்.
சிறு துளி பெரு வெள்ளம்
மிக்க நன்றி 🙏🏼
DeleteGreat. As usual good standard Tamil. I am trying to come up to that standard. Really enjoyable. Nice. Carry on
ReplyDeleteThank you very much 🙏🏼
DeleteSuper very nice beautiful
ReplyDeleteSuper👌
ReplyDeleteசரளமான,
ReplyDeleteஆற்றொழுக்கான
தமிழ் நடை!
தொடரட்டும்
தங்கள் பணி!
நன்றி 🙏🏼
Deleteஅருமை. தமிழ் மீது உள்ள ஆர்வம் மேலும் கூடுகிறது
ReplyDeleteசுபா முகுந்தன்
மிக்க நன்றி 🙏🏼
Delete