அருணனாய் அகிலமாய் பரந்தபேர் அண்டமாய்
பெரியதாய் சிறியதாய் உரியதாய் வித்தாய்
கருணையாய் கருவாய் காட்சியாய் கருத்தாய்
விரிந்ததோர் பரம்பொருளை விழிமூடித் தேடுவரோ!
முகுந்தனின் உருவமாய்ப் படர்ந்திடும் எழில்வடிவை
முகக்கண் கொண்டு முச்சூடும் உணர்ந்திடுக!
அகிலமெலாம் காத்திடும் அமலனின் அருள்வடிவை
அகக்கண் கொண்டுணர்ந்து ஆன்மஞானம் பெற்றிடுக!
No comments:
Post a Comment