Wednesday, September 11, 2019

ஓணம்




அலைமகள் அகத்துளே மறைந்த வாமனனாய்
ஆழிசூழ் பேருலகில் பாலனாய் அவதரித்து 
இடத்தில் கமண்டலமும் வலத்தில் குடையுமாய்
ஈத்துவக்கும் மாபலியிடம் மூன்றடி மண்கேட்டு
உலகளந்து வானளந்து மூன்றாம் திருவடிபதிய
ஊக்கமிகு மன்னவனின் சிரமேற் கால்பதித்து
எண்திசையும் ஆர்ப்பரிக்க பாதாளம் காட்டியபின்
ஏற்றமிகு நிலையளித்து வரம்தந்த பரமனருளால்
ஐந்திலே இரவியுறை ஆவணியாம் திங்களதில்
ஒற்றுமையாய் ஊர்கூடி கோமகனை வரவேற்க
ஓணமெனும் பண்டிகை வந்ததம்மா!  உருபசிக்கு
ஔடதமாம் நல்விருந்து தந்ததம்மா! கலையழகால் 
ஊரெலாம் பூக்கோலம் கண்டதம்மா! இன்பநிலை
பாரெலாம் பரவியே நிறைந்ததம்மா !





No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...