Thursday, September 5, 2019

பேரருளாளன்


இச்சையாலே இப்புவியில் பிறந்துழன்று தத்தளித்து
சர்ச்சையுளே அகப்பட்டென் செய்வதென்று அறிகிலாது
உச்சநிலை மருட்சியெனும் இருட்குகையில் தவிக்குங்கால்
கச்சிநகர் அருளாளர் கழலிணையே ஒளிவிளக்காம் !

ஓடிநிதம் அலைந்தழிந்து ஓய்ச்சலுறும் வேளையிலே
நாடிநாம் அடைந்திட்ட பொருளெதுவும் நமதில்லை!
பாடித்துதி பலசெய்தவன் பதமலர்கள் பணிந்திட்டால்
தேடிவந்து முத்திதருவ தத்தியூரான் அருட்கரமாம் !

ஊழ்வினை தொடர்ந்திட வந்துதித்தோம் இவ்வுலகில்
பாழ்மனம் செலுத்திடும் வகைசென்று வழிதொலைத்து
சூழ்கலியின் தாண்டவத்தால் தளர்வுறும் தருணமதில்
வாழ்வளிக்க வல்லதுவோ வரதன்கடைக் கண்மலரே!

உதித்திடும் ஐயமெலாம் விரைந்தொழிந்து ஞானம்பெற
எதிராஜர் விடுத்தவம்மூ வினாக்கட்கும் நம்பிகள்வழி
பதிலீந்து வைணவநெறி வாழ்விப்பதும் கச்சிநகர்
பதிவாழும்  அருளாளன் அமுதாமென்று அறிவீரே!

அருந்தவம் செய்முனியும் மறையோது வேதியரும்
திரும்பவும் பிறவிவேண்டா திருவடியார் திரளதுவும்
விரும்பியே தொழுதிட-அவர் வேட்கை தணிப்பது நம்
பெருந்தேவி நாயகனின் பேரருள் மழையாமே !

2 comments:

  1. Fantastic and Bombastic. I tell you, my Tamil will definitely improve if I try to follow your lyrics. I think I am able to follow your words after reading your lyrics few times. Of course the time needed to follow is slowly but steadily shortening

    ReplyDelete
  2. Thank you Sir. You are a constant source of inspiration. 🙏🏼

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...