வில்லிபுத்தூர் வந்துதித்த விட்டுசித்தன் சேயே
தொல்லுதமிழ் கவிதொடுத்த கோதையே தாயே
லா......லி
ஆடிப்பூரம் அவதரித்த அவனிமகள் நீயே
ஆதிபிரான் கரம்பிடிக்க ஆசைகொண் டாயே
லா......லி
பூமாலை தனைச்சூடி பூரித்துநின் றாயே
பாமாலை பாடியவன் பத்தியுரைத் தாயே
லா.......லி
அன்பருளம் கவருமந்த அரங்கன்கொள் மாதே
மன்னுபுகழ் தமிழீன்ற மாதரசி கோதே
லா........லி
கண்ணன்கைத் தலம்பற்றக் கனவுகண் டாயே - மணி
வண்ணனுடன் சேர்ந்தெமக்கு வாழ்வளிக்கும் தாயே
லா........லி

Very nice. Murali
ReplyDeleteThank you.
DeleteVery nice kavidhai on Aadi pooram👌👏👏👏👏-Latha Giridharan
ReplyDeleteThank you Latha.
Deleteஆடி பூரத்து கோதைக்கு பாங்காக அமைத்த லாலிக்கு வந்தனம்
ReplyDeleteநன்றி 🙏🏼
ReplyDelete