மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தவளே உனது
கண்ணில் புதுயுகம் காணுகிறேன் வாழ்வில்
வண்ணம் கூட்டிடும் தேவதையே உந்தன்
எண்ணத்தின் மேன்மையே உனதென் றரிவாய் !
கல்வியைக் களிப்புடன் கற்றுணர்வாய் மேலும்
பல்கலையும் பயின்று பொலிவுறுவாய் பேசும்
சொல்லழகால் களிப்புறும் மாந்தரெலாம் வாழும்
இல்லழகும் கண்டு வியக்கச் செய்வாய் !
தாய்தந்தை பேணுங்கடமை செய்வாய் அன்பால்
வாய்க்கும் கணவன்கை வலிமைகூட்டுவாய் பெற்ற
சேய்க்ட்கும் அன்னையாய் பண்பூட்டுவாய் உன்னை
நோயெதுவும் அண்டாமலுன் நலமும் நாடுவாய் !
எந்திரங்கள் கற்றுத் தேர்ந்திடுவாய் பிணிதீரும்
தந்திரங்கள் பற்பலவும் பயின்றிடுவாய் நாடுவக்கும்
மந்திரியும் தானாகி ஒளிர்ந்திடுவாய் வனப்பூட்டும்
சந்திரனைக் கண்டறியக் கலமும் இயக்குவாய் !
பாரதி கண்டநற் புதுமைப்பெண்ணாய் இல்வாழ்வில்
சாரதி யாகவும்நீ வழிநடத்துவாய் காத்திடும்
காரிருள் வண்ணனின் கருணையினால் இயங்கும்
பார்புகழ் வெற்றியை உனதாக்குவாய் !
பெண்ணின் வலிமையை உணர்ந்திடுவாய்...
ReplyDeleteபெண்ணே வலிமையென உணர்த்திடுவாய்..
நன்றி 🙏🏼
DeletePlease identify yourself when you post the comment. 🙏🏼
ReplyDeleteVery nice poem encouraging women
ReplyDeleteThank you.
DeleteVery nice. Murali
ReplyDeleteThank you.
ReplyDeleteExcellent J
ReplyDeleteSri
Thank you Sri 🙏🏼
Delete