நாடியே துதித்துநம் அன்பெனும் மலர்சாற்றி
தேடியே சென்றுநல் தேமதுரத் தமிழ்பாட
கேடிலா வாழ்வெனும் வரமருளும் அத்தியூரான்
ஈடிலாக் கருணைப்பே ரருளாளன் தானே!
அலைகடல் துயின்றவன் அருட்காட்சி காணத்தாம்
அலையெனவே திரளடியார் அன்புகண்டு வந்தவர்க்கு
அலையலையாய் வருந்துயர் அகற்றிடும் வரதனவன்
அலைமகள் அகத்துரைபே ரருளாளன் தானே!
பத்தியுடன் பதம்பணிய புத்தியிலே நிறைவான்
மத்தியிலே வந்தமிழ்த்தும் பற்றுகளைக் களைவான்
சித்தமெலாம் அவனென்றே சீரடியைப் பற்றிடிட
முத்தியருள் அமலன்பே ரருளாளன் தானே!
கரியதனுக் கருள்புரிய திகிரியேந்தி வந்தவன்
அருந்துணைச் சீதைமீட்க சிலையேந்தி வென்றவன்
உரிமையாய் அன்பருய்ய அபயக்கரம் தரித்தவன்
கருமணியாய் நிற்கும்பே ரருளாளன் தானே!
அரும்பும் மழலைக்கு அன்னையாகி அணைப்பவன்
குரும்புச் சிறுவர்க்கு தந்தையாய்வழி நடத்துவான்
விரும்பித் தாள்சேரும் அடியவரை ஆட்கொண்டு
பெரும்வெற்றி நல்கும்பே ரருளாளன் தானே !

Your exposition of Athi Varadar is exuberantly excellent. Amma and Appa.
ReplyDelete