Saturday, July 27, 2019

நீர்த்துளி




தான்தவழும் தளத்தோடு சற்றேனும் ஒட்டுணராது
தன்தனித் தன்மையால் உருண்டோடிக் களித்தாங்கே
வானின்று வருமொளியைப் பற்றாமல் எதிரொளிக்கும்
சாமானிய நீர்த்துளியும் வைரமென ஒளிர்வதுபோல்
தாமிருக்கும் நிலையோடு ஒன்றாமல் எக்கணமும்
ஊனுற்ற உடல்கடந்த ஆன்மஞானம் தனைவிழைந்து
வரும்பொருள் பற்றாமல் உரியவர்க்கு வழங்குமன்பர்
அரும்பொருள் ஆசியால் வெற்றிபெற் றொளிர்ந்திடுவர் !


13 comments:

  1. நீர்த்துளி ஞானம் பெற்று
    நீங்காத அவனைப் பெற

    நீரில்உள்ளான் அவனருள
    நீக்கமற நிறைவோமே

    ReplyDelete
  2. என்ன ஒரு அருமையான தமிழ் நடை. பனித்துளியின் பண்போடு வாழ்வியலில் நாம் அடைய வேண்டிய இலக்கின் அடையாளம் காட்டியது மிகவும் அருமை

    ReplyDelete
  3. அருமை...பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  4. Nice lines instigating detachment.

    ReplyDelete
  5. Nicely written ... Kudos to you... God bless

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...