முண்டாசுக் கவிஞன் கொண்டாடிய கண்ணனை
முழுதும் ரசித்துப் பார்-அங்கே முத்தியின் நிலை தெரியும்!
மீசைக் கவிஞன் ஆசையாய் அன்னையை
பேசு தமிழ் சுவைத்து பார்-அதில் தேசியம் விளங்கிவிடும்!
தீந்தமிழ் சொல் தொடுத்த தீக்கனல் பாரதியின்
தித்திக்கும் கவிதை பார்-மனதில் திண்மை மிகுந்து விடும்!
நேர்கொண்ட பார்வையுடன் சீர்செய்யும் அவன் கவியை
ஓர் முறை படித்துப் பார்-உள்ளம் ஒருமையுற்று உயர்ந்துவிடும்!
பழகுதமிழ் சொல்லெடுத்து பாவையர் மேன்மை சொன்ன
அழகொளிரும் ஆண்மை பார்-உலகின் ஆற்றல் பெருக்கெடுக்கும்!
காணும் பொருளிலெலாம் கவித்துவம் பதித்த கலை
வாணியின் பிம்பம் பார்-உன் வாழ்க்கை முழுமை பெறும்!

No comments:
Post a Comment