Saturday, July 20, 2019

விஸ்வரூபம்



கண்பார்க்கும் காட்சிநீ கண்டுணரும் விழியும்நீ
பண்கேட்கும் செவியும்நீ செவியறியும் ஓசைநீ
மண்தாங்கும் தாவரம்நீ தாங்கிநிற்கும் புவியும்நீ
எண்ணும் எழுத்தும்நீ எங்கும்நிறை வெளியும்நீ
விண்வளர் விசையும்நீ விரிந்தஎண் திசையும்நீ
வண்டாடும் மலர்மார்பா விரிசடைக் குழலினாய்
தண்டாமரை உதித்தோய் தகுதியில் நிகரில்லாய்
அண்டங்கள் அனைத்தும்நீ ஆதாரமும் நீதானே


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...