Wednesday, July 14, 2021

ரத யாத்திரை



                       நீருண்ட மேகநிறத் தழகொளிரும் கண்ணனுடன்

பாராளும் கலப்பைகொள் பலராமனும் சுபத்ரையும்

தேரினிலே தோன்றிநம் வல்வினை வேரருக்க

பூரியெனும் பதிதன்னில் யாத்திரை கண்டனரே!


உருண்டு ஓடிடும் ரதமே உடம்பாக

பரந்து விரிந்திடும் வாழ்வதுவோர் யாத்திரையாம்

திரண்ட பூரணம் ஆற்றலாய் கொலுவிருக்க

விரைந்து செலுத்தும் விசையே நாரணனாம் !


அச்சும் அதன் ஆணியும் அதன்மேலே

உச்சம் தொடும் உயர்ந்த தேருமதை

இச்சை மேலிட இழுத்துவக்கும் மாந்தரும்

கச்சை அணிந்து கைதொழும் அடியவரும்


பச்சைத் துழாய்மாலை தொடுத்தளிக்கும் அன்பரும்

கொச்சை மொழிபேசிக் கும்பிடும்  மழலையரும்

அச்சுதா அனந்தனென்று கோண்டாடும் பத்தர்களும்

மிச்சம் மீதுள யாவும் மாலவனே!




 

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...