Friday, April 10, 2020

Corona Kavithai

ஒடுங்கியது ஊரெல்லாம் ஓட்டம் நின்றதனால்
அடங்கியது பாரெல்லாம் ஆரவாரம் ஏதுமின்றி
முடங்கியது பணியெல்லாம் முச்சூடும் இயலாமையால்
மடங்கியது மனிதனின் மட்டில்லா ஆணவம்!

கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரி எனவொன்று
மண்ணிலே தோன்றிட மருத்துவமே திணரியது !
முன்னுக்கு வந்ததாய் மார்தட்டிய புவிப்பரப்பும்
பின்னுக்குச் செல்லுமோர் பேரிடர் விளைந்தது!

ஈசானப் பரப்பிலாங்கு தோன்றியே பரவிப்பலர்
மாசாணம் வரைசெல்ல வழியமைத்து வைத்தது!
கூசாமல் மானிடரை கொத்தாகக் கொய்தது
பாசமிகு சுற்றமெலாம் பறிகொடுத்து நின்றது!

அறிகுறி ஏதுமின்றி உள்ளுறையும் ஒருவகை;
சிறியதோர் இடையூராய் தலைகாட்டும் ஒருவகை;
இருமல் சளிசுரமாய் வெளிப்பட்டு அதிவிரைவில்;
எரிமலையாய் வெடித்து உருக்கிடும் ஒருவகை!

பரவலாய் வெளிப்படும் வகைபல ஆயினும்
பரவிடும் வழியது ஒன்றே நோயுளோர்
சுரப்பிலும் சளியிலும் வெளிவரும் நீர்த்துளி
அருகுள்ள அனைத்தையும் தொற்றி விரிந்திடுமே!

இருமாந்தர் நடுவேஆறடி இடைவெளி காத்துநாமும்
பொறுமையுடன் இல்லம்தங்கி தேவைக்கு ஏற்றபடிநம்
இருகைககள் சுத்தம்பேணி முகமூடி அணிந்துநோயை
பரவாமல் தடுத்திடுவோம்! பாரதம் காத்திடுவோம்!

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...